www.womanofislam.com

Muslim women's online learning centre

கோழி ரசம் 


தேவையான பொருட்கள்


குக்கரில் வேக வைக்க:

கோழி எலும்புடன் கூடிய துண்டுகள் - 100 கிராம்

பெரிய தக்காளி - 1

சின்ன வெங்காயம் சிறிது

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்

உப்பு - தேவைக்கு.

புளி தேவைக்கு சிறிது அளவு ஊற வைக்கவும்.



ரசப் பொடிக்கு:

மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 1டீஸ்பூன்

முழு மல்லி - 1டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

வறுத்துப் பொடிக்கவும்.


அத்துடன் தட்டிக் கொள்ள:

பூண்டு - 4 பெரிய பல், சின்ன வெங்காயம் - 4


தாளிக்க:

நல்ல எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கடுகு, உ.பருப்பு ,வெந்தயம் - சிறிது, வற்றல் - 1, கருவேப்பிலை - 2 இணுக்கு, பெருங்காயம் - கால் டீஸ்பூன்.



செய்முறை



முதலில் நல்ல சுத்தம் செய்து அலசிய எலும்புடன் கூடிய கோழித்துண்டுகளை குக்கரில் மேலே சொன்ன பொருட்களுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.


தாளிக்க சொன்னவற்றை சேர்த்து தாளிக்கவும்.


பிறகு வெந்த கோழியை அதில் உள்ள சூப்புடன் தாளித்த பாத்திரத்தில் சேர்க்கவும்.


வறுத்து அரைத்த ரசப்பொடி சேர்க்கவும். ரசத்தை கொதிக்க விடவும். லேசான நுரை வரும் போது,


தேவையான அளவு புளித்தண்ணீர் சேர்க்கவும். உப்பு போட்டு சரி பார்க்கவும்.


தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.


கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் கம கம கோழி ரசம் ரெடி