www.womanofislam.com

Muslim women's online learning centre

ஸலவாத் - Salawat in Tamil


♦ ஸலவாத்து இப்ராஹிமிய்யா

அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யதினா முஹம்மதின் வஆலா ஆலி செய்யதினா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா செய்யதினா இப்ராஹிம வஆலா ஆலி செய்யதினா இப்ராஹிம இன்னக ஹமீதின் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா செய்யதினா முஹம்மதின் வ ஆலா ஆலி செய்யதினா முஹம்மதின் கமா பாரக்த அலா செய்யதினா இப்ராஹிம வஆலா ஆலி செய்யதினா இப்ராஹிம இன்னக ஹமீதின் மஜீத்.    (நூல்:புகாரி)


மறுமையில் பெருமானாரின் பரிவுரை பெற:

இந்த ஸலவாத்தை ஒருவன் ஒதிவரின் மறுமையில் அவனுக்குத் தாம் பிணை ஏற்று இறைவனிடம் அவனுக்காகப் பரிந்துரைப்பதாகப் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.
​​பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காண:

இதனை ஒருவன் ஆயிரம் தடவை ஓதிவரின் அவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணும் பேறு பெறுவான்.

​​


♦ ஸலவாத்துல் ஃபத்திஹி

அல்லாஹும்ம சல்லி வசல்லிம் வபாரிக் அலா செய்யதினா முஹம்மதின் ஃபத்திஹ் லிமா உக்லிக வல் காத்திமி லிமா சபக நாசிரில் ஹக்கி பில்ஹக்கி வல் ஹாதி இலா ஸிராதிக்க முஸ்தகீம் வஅலா ஆலி ஹக்கள் கதீர் வமிக்தாரிஹில் அலீம். 


இறைஞான இரகசியங்களை அறிய:

இதனை வழக்கமாக நூறு தடவை ஓதிவரின் மறைவான இறைஞான இரகசியங்களை அறியலாம்.


விருப்பங்கள் நிறைவேற:

இதனை ஓருவன் தன் ஆயுளில் ஒரு தடவை ஓதினும் அவன் நரகம் புகுத மாட்டான்.


பெருமானாரை நேரில் காண:

ஒருவன் வெள்ளி அல்லது வியாழன் அல்லது திங்கள் இரவுகளில் முதல் ரகஅத்தில் ஸூரா ஃபாத்திஹாவுக்குப் பின் இன்னா அன்ஸல்னாஹு ஸூராவையும் இரண்டாம் ரகஆத்தில் இதா ஸுல்ஸில்லத்துல் அர்ளு ஸூராவையும் மூன்றாம் ரகஅத்தில் குல்யா அய்யுஹல் காஃபிரூன் ஸூராவையும் நான்காம் ரகஅத்தில் குல் அவூது பிறப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ் ஸூராக்களையும் ஓதி நான்கு ரகஅத் நஃபில் தொழுது பின்னர் நறுமணம் நிறைந்த சூலில் இந்த ஸலவாத்தை ஆயிரம் தடவை ஓதின் அவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணும் பேறு பெறுவான்.

♦ ஸலவாத்துஸ் ஸஆதா

அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹ‌ம்மதின் வ ஆலிஹி வஸஹ்பிஹி அததமாஃபி இல்மில்லாஹி ஸலாத்தன் தாயிமத்தன் பிதவாமி முல்கில்லாஹ்.

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் நாளொன்றுக்குப் பதினாயிரம் ஸவாத்துக்களை ஓதி வரும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். அதை அறிந்த பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இதனை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து இதனை ஒரு தடவை ஓதுவது மற்ற ஸலவாத்துக்களை ஒரிலட்சம் தடவை ஓதுவதற்கு நிகராகும் என்று கூறினர்.


இம்மை மறுமைப் பேறு பெற:

இதனை வெள்ளியன்று வழக்கமாக ஆயிரம் தடவை ஒதிவரின் இம்மையிலும், மறுமையிலும் நற்பேறு பெறலாம்.


​​

ஸலவாத்துல் உம்மிய்யி

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதினின் அப்திக வநபிய்யிக வரசூலிக நபியில் உம்மிய்யி வ அலா ஆலிஹி

​வஸஹ்பிகா வஸல்லிம். 


“இதனை ஒருவன் வெள்ளியன்று எண்பது தடவை ஓதின் அவனுடைய எபது ஆண்டுப் பாவங்கள் இறைவன் பொறுத்தருள்வான்.” என்று ஸஹ்லு இப்னு அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) வர்கள் கூறியுள்ளார்கள்.


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை விழிப்பு நிலையில் காண:

“ஒருவன் இதனை நாள்தோறும் ஐந்நூறு தடவை வழக்கமாக ஓதிவரின் அவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை விழிப்பு நிலையில் காணப பெறாது இறப்பெய்த மாட்டான்” என முர்ஸிய்யி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகின்றார்கள்.


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை காண:

“ஒருவன் வெள்ளி இரவில் ஒவ்வொரு ரகஅத்திலும் ஸூரா ஃபாத்திஹா ஒரு தடவையும் ஆயத்துல் குர்ஸி பதினைந்து தடவையும் ஓதி இரண்டு ரகஅத் நஃபில் தொழுத பின் ஆயிரம் தடவை இந்த ஸலவாத்தை ஓதுவானாயின் அவன் எனைத் திட்டமாகக் கனவில் கண்டு கொள்வான். மறு ஜும்ஆ வருவதற்குள் எவனொருவன் என்னைக் கனவில் கண்டானோ அவனுக்குச் சுவர்க்கம் நிச்சயமாகி விட்டது.” என்று பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றனர். இச்செய்தி முஹ்யித்தீன் ஆண்டகை எழுதிய ‘குன்யத்துத் தாலிபீன்’ என்ற நூலிலும் ‘அஃபஸலுஸ் ஸலவாத்’ என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

​​


♦ ஸலவாத்துல் முன்ஜியா

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதினின் சலாத்தன் துன்ஜினா பிஹா மின் ஜமீஹில் அஹ்வாலி வல் ஆஃபாத்தி வதக்ளிலனா பிஹா ஜமீஹல் ஹாஜாத்தி, வதுதஹ்ருணா பிஹா மின் ஜமீலில் செய்ஹாத்தி, வதர்பஹுணா பிஹா இந்திக அஹ்லா வதரஜாத்தி, வ தபல்குனா பிஹா அக்சல் காயாத்தி, மின் ஜமீஹில் கைராத்தி, ஃபில் ஹயாத்தி வபஹ்தல் மமாத்தி, வஆலா ஆலிஹி வசஹ்பிஹி வசல்லிம் தஸ்லீமன் கசீரா. 


எண்ணங்கள் நிறைவேற:

இதனை ஆயிரம் தடவை ஓதின் இறையருளால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.


துன்பம் நீங்க:

இதனைத் துன்பத்தில் சிக்கிக் கொண்டிருப்பவன். ஆயிரம் தடவை ஓதின் அவன் இறையருளால் துன்பம் நீங்கப் பெறுவான்.


இரணம் அதிகரிக்க:

இதனை ஒருவன் வழக்கமாக ஆயிரம் தடவை ஓதிவரின் அவனின் இரணம் அதிகரித்து அவன் செல்வனாவான்.


நாடிய நாட்டங்கள் நிறைவேற:

இதனை ஒருவன் நள்ளிரவு ஆயிரம் தடவை ஓதி இறைவனிடம் இறைஞ்சின் அவன் நாடிய நாட்டங்கள் நிறைவேறும், மின்னலின் வேகத்தில் அவனுடைய இறைஞ்சுதல் இறை சந்நிதானத்தை எய்தும் எண்டும் கூறப்படுகிறது. ‘இது அர்ஷின் புதையல்களில் ஒன்று’ என ஷைகுல் அக்பர் இப்னு அரபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

♦ ஸலவாத்துன் நூரி ஸாத்தி 

அல்லாஹும்ம சல்லி வசல்லிம் வபாரிக் அலா செய்யதினா முஹம்மதின் நூரி ஸாத்தி வஸிர்ரி அஸ்ராரி ஃபி ஸாஹிரி அஸ்மாஹி வஸ் ஷிபாத்தி வஆலா ஆலிஹி வசஹ்பிஹி வசல்லிம்.


​​ஒரிலட்சம் ஸலவாத்துகளுக்கு நிகர்:

இதனை ஒரு தடவை ஓதுவது மர ஸலவாத்துகளை ஒரிலட்சம் தடவை ஓதுவதற்கு நிகராகும்.


துன்பம், பீடை அகல:

இதனை ஒருவன் தினந்தோறும் ஐந்நூறு தடவை ஓதிவரின் அவனுடைய துன்பங்களும், அவனைப் பீடித்த பீடைகளும் அவனை விட்டகலும்.


கண் ஒளி, இதய ஒளி எய்தப் பெற:

இதனை வழக்கமாக ஓதி வருபவர்கள் கண் ஒளி, இதய ஒளி ஆயாவை எய்தப் பெறுவர். இதனைச் சிறு வயது முதல் வழக்கமாக ஓதி வருபவர்களுக்குக் கண் ஒளி மங்காது. இஅது சோதிக்கப்பட்ட ஒன்றாகும்.ஸலவாத்து தாஜுஸ்

அல்லாஹும்ம ஸல்லி அலா செயிதினா வமௌhலானா முஹம்மதின் சாஹிபித்தாஜி வல் மிஃராஜி வல் புராக்கி வல் அலம். தாஃபிஇல் பலாஇ வல் வபாயி வல்கஹ்த்தி வல் மரளி வல் அலம். இஸ்முஹு மக்தூபுன் மர்ஃபூவுன் மஷ்ஃபூஉன் மன்கூஸுன் ஃபில் லவ்ஹி வல்கலம் செய்யிதில் அரபி வல் அஜமி ஜிஸ்முஹு முகத்தஸுன் முஅத்தருன் முதஹ்ஹருன் முனவ்வருன் ஃபில் பைத்தி வல்ஹரம்.


ஸம்ஸில்லுஹா பத்ரித்துஜா ஸத்ரில் உலா நூரில் ஹுதா கஹ்ஃபில் வரா மிஸ்பாஹிள்ளுளம் ஜமீலிஸ் ஸியம் ஸஃபீஇல் உமம் ஸாஹிபில் ஜூதி வல்கரமி வல்லாஹு ஆசிமுஹு வஜிப்ரீலு ஹா(H)திமுஹு வல் புராக்கு மர்கபுஹு வல்மிஃராஜு ஸஃபருஹு வஸித்ரத்துல் முன்தஹா மகாமுஹு வகாப கவ்ஸைனி மத்லூபுஹு வல் மத்லூபு மக்ஸுதுஹு வல் மக்ஸூது மவ்ஜூதுஹு ஸய்யிதில் முர்ஸலீன் ஹா(H)த்தமுன் னபிய்யீன் ஷஃபீஇல் முத்னிபீன் அனீஸில் ஙராயிபீன் ரஹ்மத்தன் லில்ஆலமீன் ராஹத்தில் ஆஸிக்கீன் முராதல் முஸ்தாக்கீன் ஷம்ஸில் ஆரிஃபீன் ஸிராஜிஸ்ஸாலிகீன் மிஸ்பாஹில் முகர்ரபீன் முஹிப்பில் ஃபுகராயி வல் மஷாகீன் ஸய்யிதி தக்கலைனி நபிய்யில் ஹரமைனி இமாமில் கிப்லதைனி வஸீலத்தினா ஃபித்தாரைனி ஸாஹிபி காப கவ்ஸைனி மஹ்பூபிரப்பில் மஸ்ரிகைனி வல் மஃரிபைனி ஜத்தில் ஹஸனி வல் ஹுஸைனி மவ்லானா வமவ்லா தக்கலைனி அபில்காஸிமி முஹம்மதிப்னி அப்தில்லாஹி நூரின் மின் நூரில்லாஹி யாஅய்யுஹல் முஸ்தாக்கூன பிநூரி ஜமாலிஹி ஸல்லூ அலைஹி வஆலிஹி வஅஸ்ஹாபிஹி வஸல்லிமூ தஸ்லீமா.​


இது அதன் பெயருக்கேற்ப ஸலவாத்துகளின் மணிமகுடம் போன்றுள்ளது. இதனுடைய மாண்பு அளப்பரியதாகும். தம் பெயரை வெளியே காட்ட விரும்பாத மேதை ஒருவரால் இது இயற்றப் பெற்றது என்று கூறப்படுகிறது.


குழந்தை பெற:

இருபத்தியொரு பேரீத்தம் பழங்களை ஒன்றாக வைத்து அவற்றின் மீது ஏழு தடவை இதனை ஓதி நாளொன்றுக்கு ஒன்று வீதம் இருபத்தியொரு நாட்கள் அந்தப் பேரீத்தம் பழங்களை ஒரு பெண் உண்டு அதன்பின் தன் கணவனுடன் மருவின் இறைவனருளால் கருவுறுவாள். அதன்பின் கருவில் ஏதேனும் கோளாறு ஏற்படின் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு இதனைத் தண்ணீரில் ஓதி ஊதிக்குடித்துவரின் கரு காக்கப் பெற்று குழந்தை பிறக்கும்.


குறிக்கோள் எய்தப் பெற:

நள்ளிரவில் விழித்தெழுந்து ‘உளு’ வுடன் நாற்பத்து ஒரு தடவை வீதம் நாற்பது தடவை இதனை ஓதின் எண்ணிய குறிக்கோளை இறையருளால் எய்தப் பெறலாம்.


வறுமை நீங்க:

இதனை ஒருவன் இஷா தொழுதபின் நாற்பத்து ஒரு தடவை வீதம் நாற்பது நாட்கள் ஓதிவரின் அவனைப் பிடித்த வறுமை தோலையும்.


இரணம் அதிகரிக்க:

இதனை ஒருவன் வைகறைத் தொழுகைக்குப் பின் வழக்கமாக ஒரு தடவை ஓதிவரின் அவனுடைய இரணம் அதிகப்படும்.


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காண:

ஒருவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணவிரும்பின் வளர்ப்பிறையில் வரும் ஒரு வெள்ளி இரவில் தூய்மையான உடையணிந்து நறுமணம் பூசி இஷாத் தொழுகை முடித்து உளுவுடன் நூற்று எழுபது தடவை இந்த ஸலவாத்தை ஓதி விட்டு உறங்கவும். இவாறு தொடர்ந்து மொத்தம் பதினொரு இரவுகள் செய்துவரின் இவ்விரவுகளில் எதிலாவது அவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணும் பேறு பெறுவான்.

​​

♦ ஸலவாத்துஸ் ஸதகா

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதினின் அதத மாஃபி இல்மில்லாஹி சலாத்தன் தாஹிமத்தன் பிதவாமி முல்கில்லாஹ்.


ஸதக்கா கொடுத்த பலனை பெற:

“எவர் ஒருவருக்கு ஸதக்கா கொடுக்க வசதி இல்லையோ அவர் இந்த ஸலவாத்தை ஓதி வரவும். இது அவர் செய்யக் கூடிய ஸதக்காவாக ஆகிவிடும்” என்று எம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருள்மொழி பகர்ந்துள்ளார்கள். எனவே இந்த ஸலவாத்தை ஸதக்கா கொடுக்க வசதியில்லாதவர்களுக்கு அருளப்பட்ட ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.


சொத்து, சுகங்கள் அதிகப்பட:

ஒருவன் இந்த ஸலவாத்தை அதிகமதிகமாக ஓதிவரின் அவனுக்கு சொத்து, சுகங்கள் அதிகமாகும்.

​​


♦ ஸலவாத்துர் ரூஹ்

​அல்லாஹும்ம ஸல்லி அலா ரூஹி முஹம்மதின் ஃபில் அர்வாஹி வஅலா ஜசதி ஃபில் அஜ்சாதி வஅலா கப்ரிஹி ஃபில் குபூர்.

நோய் நீங்கப் பெற:

அல்லாஹ்வின் நல்லடியார் ஒருவர் நீரடைப்பால் நலிவுற்றபொழுது ஷிஹாபுத்தீன் இப்னு ரஸ்லான் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அவரின் கனவில் திருத்தொற்றம் வழங்கினர். அப்பொழுது அவர் அவர்களிடம் தம் நோய் பற்றிக் கூறிய பொழுது, “அவ்விதமாயின் நீர் ஏன் அதற்கான அருமருந்தொன்றைப் பயன்படுத்தி நலன் பெறக் கூடாது?” என்று வினவினர். “என்ன அந்த அருமருந்து?” என்று அவர் ஆவலுடன் வினவிய பொழுது மேலே கண்ட ஸலவாத்தை அவர்கள் அவருக்கு எடுத்தொதினர். திடுக்குற்று விழித்தெழுந்த அவர் அந்த ஸலவாத்தைத் தொடர்ந்து ஓதி வர அவர் விரைவில் நலன் பெற்றார்.பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காண:

“இதனை ஓதுபவர் என்னைக் கனவில் காண்பார்” என்று பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களே திருவாய் மலர்ந்துள்ளனர்.
தமிழ் பகுதி - ஸலவாத்